குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட தும்பகாட்டுவிளை பகுதியில் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்லும் பாதையில் உள்ள ஒரு மின் கம்பத்தின் மேற்பகுதி மிகவும் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்த வண்ணம் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் காற்றின் வேகத்தில் மின்கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மீது விழுந்து உயிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய கம்பத்தை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரசாந்த், குளச்சல்.