தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேம்பாலம் இறக்கம் சுங்கான் கேட் பகுதியில் மூன்று சாலைகள் சந்திக்கும் இடம் உள்ளது. இந்த பகுதியில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வசதிக்காக உயர்மின்கோபுரவிளக்கு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மின்கோபுரவிளக்கு சரிவர எரியாமல் இருந்தது. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து "தினத்தந்தி" புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் இருந்த உயர்மின்கோபுர விளக்கு ஒளிர நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் "தினத்தந்தி" நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும்,பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.