கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் கன்னி மாரியம்மன் கோவில் அருகே உள்ள மின்கம்பம் வளைந்து காணப்படுகிறது. சூறாவளி காற்று வீசினால், எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் அபாயகரமாக அந்த மின்கம்பம் உள்ளது. இதனால் மின் விபத்து அபாயம் காணப்படுகிறது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் வளைந்து கிடக்கும் அந்த மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.