ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-09-29 14:24 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெற்றியூர் ஊராட்சியில் மேலக்குடியிருப்பு பகுதியில் உள்ள மெயின்ரோட்டில் உடைந்து விழும் நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. இந்த மின்கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்