ஆபத்தான மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-28 13:20 GMT
நாகை மாவட்டம் திருமருகல் கட்டுமாவடியில் இருந்து ஆலத்தூர் வரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் தண்டாளம் பிள்ளையார் கோவில் அருகே உள்ள மின்கம்பம் பராமரிப்பின்றி ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. மேலும் அதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எப்போது வேண்டுமானால் கிழே விழும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் அந்த பகுதியை கடந்து சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்