அஞ்சுகிராமம் தெற்கு பஜார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தில் தெருவிளக்குக்கான சுவிட்ச் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டியின் மூடி சேதமடைந்து காணப்படுவதுடன் மிகவும் தாழ்வாக பொருத்தப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் சிறுவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த காணப்படும் பெட்டியை அகற்றி விட்டு புதிய பெட்டியை சிறுவர்களுக்க எட்டாத உயரத்தில் பொருத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஹிட்லர், அஞ்சுகிராமம்.