ஆபத்தான நிலையில் மின்கம்பம்

Update: 2022-09-26 15:36 GMT

தஞ்சை பள்ளியக்கிரஹாரம் கடைத்தெரு மையப்பகுதியில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. குறிப்பாக மின்கம்பத்தின் அடிப்பகுதி முழுவதும் சேதமடைந்து ஓட்டை விழுந்து உள்ளது. இதன்காரணமாக மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் உள்ள சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

படம் உள்ளது.

மேலும் செய்திகள்