கடலூர் மஞ்சக்குப்பம் ஜட்ஜ் பங்களா சாலையில் உள்ள பெரும்பாலான தெருமின் விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ள அந்த சாலையில் இருக்கும் தெருவிளக்குகள் எரியாததால், அவ்வழியாக செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். ஆகவே எரியாத அனைத்து தெருவிளக்குகளையும் சரிசெய்ய, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.