கடலூர் புதுக்குப்பம் போலீஸ் குடியிருப்பு அருகில் உள்ள மின்கம்பங்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளது. அதில் உள்ள சிமெண்டு காரைகள் அனைத்தும் பெயர்ந்து விழுந்து எலும்புக்கூடு போல் காணப்படுகிறது. எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த மின்கம்பங்கள் இருக்கும் வழியாக செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். ஆகவே சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.