நாகை மாவட்டம் திருமருகலில் நன்னிலம் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். இதனால் எப்போதும் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்து கொண்டே இருக்கும். இந்தநிலையில் புத்தகரம்-கேதாரிமங்கலம் இடையே உள்ள சாலையில் 2 மின்கம்பங்களின் மேல்பகுதியில் சேதமடைந்துள்ளது. மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மிகுந்த அச்சத்துடன் பொதுமக்கள் கடந்து சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அபாய நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.