தூத்துக்குடி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் வாகைகுளம் உள்ளது. இங்குள்ள சுங்கச்சாவடியில் இருந்து பேரூரணி விலக்கு வரையில் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களிலும் மின்கம்பங்கள் இல்லை. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே சாலையின் இருபுறமும் மின்கம்பம் அமைத்து மின்விளக்கு பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.