காட்டாத்துறை சந்திப்பில் இருந்து மருதூர்குறிச்சி செல்லும் சாலையில் பூவன்விளை பகுதியில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் பொது பாதையின் நடுவிலும், அந்த வழியாக செல்லும் பாதசாரிகளுக்கு இடையூறாகவும் அமைந்துள்ளது. மேலும் கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து, சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்து சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடையூறாக உள்ள மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.