விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து பொன்னேரி புறவழிச்சாலை வரை நான்கு வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் நடுவில் தடுப்பு கட்டைகள் அமைத்து உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பூதாமூரில் இருந்து பொன்னேரி புறவழிச்சாலை சந்திப்பு வரை உள்ள எந்தவொரு மின்விளக்குகளும் எரியாமல், காட்சி பொருளாகவே உள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் நேர்ந்து வருகிறது. மேலும் வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களும் நடக்க வாய்ப்புள்ளது. ஆகவே எரியாத மின்விளக்குகளை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.