கோவில்பட்டி தாலுகா இலுப்பையூரணி தாமஸ் நகர் என்.ஜி.ஓ. காலனியில் கடந்த மாதம் உயர்அழுத்தமின் கம்பம் சாய்ந்ததை அடுத்து புதிய மின்கம்பம் சாக்கடை கால்வாய் செல்லும் வழியில் நடப்பட்டு சாக்கடை நீரும் செல்ல முடியாமல் உள்ளது. மின்கம்பமும் சரியான முறையில் நடப்படாமல் எப்போது விழுமோ என்ற அபாய நிலையில் உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.