குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பள்ளி வளாகம் பகுதியில் இரும்பு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் மழை நேரங்களில் ஷாக் அடிக்கிறது. இதனால் அந்த பகுதியில் குழந்தைகள் விளையாடும் போது கம்பத்தின் மீது கை வைத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காத்திருக்கும் ஆபத்தை தவிர்க்க இரும்பு மின்கம்பத்தை மாற்றி சிமெண்டு கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?