வேடசந்தூர் அருகே நாகையகோட்டை புதுரோடு ஆதிதிராவிடர் காலனியில் மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டிட கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே மின்கம்பத்தை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.