தேனியை அடுத்த சருத்துபட்டி இந்திராகாலனியில் தெருவிளக்குகள் கடந்த ஒரு மாதமாக எரியவில்லை. இதனால் இரவில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் சமூக விரோத செயல்கள் அரங்கேறுகிறது. இதன் காரணமாக பெண்கள் வீடுகளைவிட்டு வெளியேறவே அச்சப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?