நாகை புதிய கடற்கரையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்களின் வசதிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. தற்போது அந்த விளக்குகளில் ஒரு சில மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் குறிப்பிட்ட இடங்கள் மட்டும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் நடைபயிற்சிக்கு வருவோர் வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் ஏற்படுமோ? என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.