ஆபத்தான மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-19 13:57 GMT

நாகை மாவட்டம் திருமருகல் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் திருமருகல் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சுகாதார நிலையத்தின் அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. அதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து அபாய நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய மின்கம்பம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்