கரூர் மாவட்டம், நடையனூர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்களும், மின்மாற்றியும் ஆபத்தான நிலையில் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.