சாலையின் நடுவில் மின்கம்பம்

Update: 2022-09-18 11:42 GMT

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் லக்கி நாயக்கன்பட்டி வடக்குதெருவில் சிமெண்டு சாலை போடப்பட்டுள்ளது. அதாவது தெருவின் நடுவில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையின் நடுவில் மின்கம்பம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த சாலையில் இருசக்கர வாகனத்தை தவிர வேறு எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே உயிர் இழப்புகள் ஏற்படும் முன் அந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்