தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொட்டல்புதூர் மெயின்பஜார் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. அங்கு கடந்த ஒரு மாதமாக மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். எனவே மின்விளக்கு எரிவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.