தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருக்கோடிக்காவல் பகுதியில் உள்ள வயல்வெளியில் ஆபத்தான நிலையில் மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்த மின்மாற்றியை தாங்கி பிடித்துள்ள மின்கம்பங்கள் வலுவிழந்து காணப்படுகிறது. இதன்காரணமாக மின்மாற்றி சாய்ந்த நிலையில் காட்சி அளிக்கிறது.இதனால், மின்மாற்றி எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் சூழல் நிலவுகிறது. மேலும், அதிலிருந்து செல்லும் மின்கம்பிகளும் தாழ்வாக செல்கிறது. இதனால் விவசாயிகள் அச்சத்துடன் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்மாற்றியை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?