திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த பூந்தோட்டம் ஊராட்சி சாத்தனூர் கிராமத்தில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக எரியாமல் உள்ளது. இந்த வழியாக பொதுமக்கள் தினமும் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். வெளியூர்களுக்கு வேலை நிமித்தமாக பஸ்களில் சென்று வரும் பெண்கள் இரவு நேரங்களில் அச்சத்துடனேயே செல்கின்றனர். இந்த பகுதி இருள்சூழ்ந்து காணப்படுவதால் வழிப்பறி உள்ளிட்டவை ஏற்படுமோ? என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் அதிக விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்துள்ள உயர் கோபுர மின் விளக்கினை சீரமைத்து ஒளிரச் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.