நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட சரக்கல்விளை சானல் கரையில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பத்தில் மின் விளக்குக்காக பொருத்தப்பட்டுள்ள 'சுவிச்' பெட்டி திறந்த நிலையிலும், தாழ்வாகவும் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் சிறுவர்கள் பெட்டிகள் கைகளை வைத்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த பெட்டியை அகற்றி விட்டு புதிய பெட்டியை உயமான இடத்தில் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆன்றோ டெகோசிங் ராஜன். வேதநகர்.