விருத்தாசலம் பெரியார் நகரில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்விளக்குள் கடந்த சில மாதங்காளாக எாிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியை கடக்கும் பொதுமக்கள் அச்சத்துடனே செல்லும் நிலை உருவாகி உள்ளது. இருள் நிறைந்து இருப்பதால் சில நேரங்களில் விபத்துக்களுக்கும் வழிவகுக்கிறது.
இதன் மூலம் பெருந்தொகை செலவு செய்து உயா் கோபுர மின்விளக்கு அமைத்தும் யாருக்கும் பயன்படாமல் காட்சி பொருளாகவே இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள் இதில் கவனம் செலுத்தி மக்களின் அச்சத்தை போக்க மின்விளக்குகளை ஒளிர செய்திட முன்வர வேண்டும்.