பயணிகள் வசதிக்காக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பஸ்களும் அங்கு வந்து பயணிகளை ஏற்றி செல்ல பஸ் நிலையம் வசதியானது. அதுபோல்தான் அவினாசியிலும் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. இந்த புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் கோவை, திருப்பூர் என பல்வேறு ஊர்களுக்கு வேலைக்கு செல்வோர், கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பஸ் வரும் என்ற நம்பிக்கையில் காத்து நிற்கிறார்கள். இதனால் அவினாசி புதிய பஸ் நிலையத்தில் காலை நேரத்தில் அதிக அளவு கூட்டம் இருக்கும். ஆனால் சில சர்வீஸ் பஸ்கள், பஸ் நிலையத்துக்குள் வராமல் சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளும் ஏற்படும் அபாயம்உள்ளது. இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, அனைத்து பஸ்களும், பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும்.