கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மாரியம்மன் கோவில் தெருவில் (அப்பாவு சந்து) உள்ள மின்விளக்குகள் கடந்த சில வாரங்களாக எரியவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. ஆகவே எரியாத தெருமின் விளக்குகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.