மின் விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2022-07-13 12:13 GMT

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில் லெட்சுமாங்குடி சாலையில், பூதமங்கலம் பயணியர் நிழலகம் தொடங்கி, கீழபனங்காட்டாங்குடி முகப்பு சாலை வரை சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த மின்கம்பங்களில் மின் விளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் செல்வோர் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், மின் விளக்கு இல்லாமல் உள்ளதால் வழிப்பறி நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் விளக்கு பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்