திருப்பூர் காலேஜ் ரோடு கல்லம்பாளையம் விநாயகர் கோவில் மளிகை கடை அருகில் உள்ள மின் கம்பத்தில் கடந்த 10 நாட்களாக மின்விளக்கு எரியாமல் இருந்தது. பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடம் என்பதால் இரவில் மின்விளக்கு எரியாததால் மிகவும் சிரமமாக இருந்தது. இதுகுறித்த செய்தி படத்துடன் 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சீரமைக்கப்பட்டு மின்விளக்கு எரிகிறது. இதனை சீரமைக்க வழிவகுத்த 'தினத்தந்தி'க்கும் நடவடிக்கை எடுத்த மின்சார வாரியத்துக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.