பல்லடம் என்.ஜி.ஆர். சாலையில் அதிக எண்ணிக்கையில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதையடுத்து பொதுமக்கள் நலனுக்காக ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டது. அந்தவிளக்கு பொருத்தப்பட்ட நாளில் இருந்து ஆண்டுக்கு 2 மாதம் மட்டுமே எரிகிறது. மற்ற மாதங்களில் எரிவது இல்லை. கடமைக்கு தரமற்ற விளக்கை பொருத்தி உள்ளனர். எனவே இனியாவது தரமான விளக்கை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.