கடலூர் செல்லங்குப்பம் இம்பிரீயல் சாலையில் உள்ள மின் விளக்குகள் நாள் முழுவதும் எரிந்து கொண்டிருக்கிறது. மின் சிக்கனம் தேவை என்று மின்வாரியத்தால் பிரசாரம் செய்து வரும் வேளையில், இது போல் மின்சாரம் வீணாவதை கண்டு மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். பகலில் மின்விளக்கு எரிய காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், மின்வாரியத்தினரும் மின் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும்.