இருள் சூழ்ந்த சாலை

Update: 2022-09-12 15:50 GMT

தர்மபுரி-பாலக்கோடு சாலையில் பாப்பாரப்பட்டி சாலை பிரியும் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் இருபுறமும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் மட்டும் இரவில் எரிகின்றன. மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் எரியாததால், சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த மின்விளக்குகளை எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்