தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேம்பாலம் இறக்கம் சுங்கான் கேட் பகுதியில் 3 சாலைகள் சந்திக்கும் இடத்தில் வாகன ஓட்டிகள் வசதிக்காக உயர்மின்கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இது கடந்த சில வாரங்களாக மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இருள் காரணமாக விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள உயர்மின்கோபுர விளக்கு ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?