தஞ்சையை அடுத்த கண்டியூா் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் குழந்தைகள், முதியவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மின்வெட்டால் மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்களும் உரிய நேரத்துக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?