தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி பழவத்தான்கட்டளை முத்துப்பிள்ளைமண்டபம் வடக்கு தெருவில் மின்கம்பம் ஒன்று பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதன்காரணமாக மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. குறிப்பாக அதன் அடிப்பகுதி முழுவதும் சேதமடைந்துள்ளது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் நிலை உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?