விருத்தாசலத்தில் ஆலடி ரோட்டில் உள்ள ஸ்டேட் வங்கி காலனி தெருவில் மின்கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது. தொட்டு விடும் தூரத்தில் உள்ள அந்த மின்கம்பியால், மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே உயிர் பலி ஏற்படுவதற்குள், தாழ்வாக செல்லும் மின்கம்பியை சரி செய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.