திருப்பூர் காலேஜ் ரோடு கல்லம்பாளையம் விநாயகர் கோவில் மளிகை கடை அருகில் உள்ள மின் கம்பத்தில் கடந்த 10 நாட்களாக மின்விளக்கு எரிவதில்லை. பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடம் என்பதால் இரவில் மின்விளக்கு எரியாததால் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, இதனை விரைந்து சீரமைக்குமாறு அப்பகுதி மக்கள் மின்சார வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.