தாராபுரம் 3-வது வார்டு சித்ராவுத்தன்பாளையம் மேற்கு தெரு பகுதியில் மின்கம்பம் உடைந்து விழும் நிலையில் உள்ளது. மின்வினியோகம் இருக்கும் நிலையில் பலத்த காற்று வீசும்போது மின்கம்பம் முறிந்து விழுந்தால் விபரீதம் நடக்க வாய்ப்பு உள்ளது. இந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மனு கொடுக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே புதிய மின்கம்பத்தை நட்டு, வரும் ஆபத்தை தடுக்க முயற்சி எடுக்கலாமே?