சேதமடைந்த மின்கம்பம்

Update: 2022-09-11 13:12 GMT

அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டில் எக்ஸ் பெதித் 2-வது தெரு உள்ளது. இந்த தெருவில் அமைக்கப்பட்டு ஒரு மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெயியே தெரிந்த வண்ணம் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதசாரிகள் நலன்கருதி சேதமடைந்த கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.ஜார்ஸ் மலர்கொடி, அழகப்பபுரம்.

மேலும் செய்திகள்