தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-07-12 15:35 GMT

திருச்சி மாவட்டம், சிறுகனூர் மின்பகிர்மான பகுதி எம்.ஆர்.பாளையம் அரசினர் மாணவர் விடுதிக்கு எதிர்புறம் உள்ள வீதியில் மின்கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை உடனடியாக மாற்ற வேண்டும் என கடந்த 11-ந்தேதி தினத்தந்தி புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி எதிரொலியாக சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் ஆபத்தான மின்கம்பத்தை மாற்றிவிட்டு புதிய மின்கம்பம் நட்டனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்