புகார் பெட்டி செய்தி எதிரொலி

Update: 2022-09-09 17:42 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரெயில்வே மேம்பாலம் பகுதியில் மின்விளக்கு எரியாமல் இருந்தது. இதுபற்றி `தினத்தந்தி' புகார் பெட்டி பகுதிக்கு வாசகர் பாலமுருகன் அனுப்பிய பதிவு பிரசுரம் ஆனது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்விளக்கை எரிய செய்துள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த `தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்