நாமக்கல் டவுன் முருகன் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து மாயம் பிள்ளையார் கோவில் செல்லும் சாலை உள்ளது. அந்த சாலையில் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் அந்த சாலை வழியாக இரவு நேரங்களில் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அந்த சாலையில் தெருவிளக்குகளை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.