தவுட்டுப்பாளையத்தில் இருந்து அரசு போக்குவரத்து பணிமனை வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோட்டில் மின் கம்பங்கள் உள்ளன. ஆனால் இந்த மின் கம்பங்களில் ெதருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரம் இந்த மின் கம்பங்கள் இருந்தும் தெரு விளக்கு இல்லை இரவு நேரத்தில் இந்த ரோடு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக பணிமனைக்கு செல்லும் போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் பெண்கள் அச்சத்தில் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே அந்த ரோட்டில் உள்ள மின் கம்பத்தில் தெருவிளக்குகள் அமைக்க மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.