ஒளிராத மின் விளக்குகள்

Update: 2022-07-12 09:47 GMT

திருப்பூர் 15 வேலம்பாளையம் 12-வது வார்டு பஸ் நிறுத்தம் அருகில் மின்விளக்கு எரிவதே இல்லை. இந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் ஒரு மாதமாக எரியவில்லை. இதனால் பொதுமக்கள் அந்த பகுதியில் இரவு நேரத்தில் அச்சத்துடன் கடந்து செல்கிறார்கள். திருட்டு பயமும் அதிகரித்து விட்டது. எனவே மின் விளக்குகள் சரி செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்