ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-09-07 11:48 GMT
கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டி அருகே உள்ள கொமட்டேரி கிராமத்தில் வயல் பகுதியில் நடுப்பகுதியில் மின்கம்பம் ஒன்று உள்ளது. தற்போது அந்த மின்கம்பம் பழுந்துடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானலும் கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக நடந்து செல்வதற்கே பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்