மயிலாடி, ஆராட்டு மடத்தில் இருந்து பொத்தையடி செல்லும் சாலையில் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் வரை மின் கம்பங்களோ, தெரு விளக்குகளோ அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக இரவு நேரம் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அச்சத்துடனேயே அந்த இடத்தை கடந்து செல்கின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி அந்த பகுதியில் மின்கம்பங்கள் அமைத்து விளக்கு பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
C Ramdhas, Santhaiady.