தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் தாலுகா அலுவலகம் அருகே முத்துப்பேட்டை சாலையிலிருந்து கல்லணை கால்வாய் திரும்பும் இடத்தில் மின்கம்பம் ஒன்று பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன்காரணமாக மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மின்கம்பம் உள்ள பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
படம் உள்ளது