பரங்கிப்பேட்டை காஜியார் தெருவில் உள்ள தெரு மின்விளக்கு கடந்த 10 நாட்களாக எறியவில்லை. இ்தனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால், வழிப்பறி, திருட்டு போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகி உள்ளது. இதுகுறித்து அதிகாாிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி தெரு மின்விளக்கை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.