தஞ்சை மாநகராட்சி கொள்ளுப்பேட்டை தெருவில் இருந்து தொல்காப்பியர் சதுக்கம் செல்லும் சாலையில் அந்தோணியார் கோவில்தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மின்கம்பத்தில் அடிப்பகுதி முழுவதும் சிமெண்டு காரைகள் பெயர்ந்து உள்ளன. இதன்காணரமாக இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் வலுவிழந்து காணப்படுகிறது. எனவே, இந்த மின்கம்பத்தினால் எப்போது வேண்டுமானாலும் அசம்பாவிதம் ஏற்படலாம். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?